பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....



கண்களின் கோளாறுகள்............




கூத்தாடுகிறதே பார்
என் எண்ணத்தில் அடிப்பட்ட
மரத்து இலைகள்!
பறித்துவிட்டதாலோ என்னவோ
பூவுக்கும் என்மீது கோபம்தான்.
பூவின் சொந்தமே! கலங்காதிரு
சிந்தனைகளினால் உனக்கொரு
தோட்டம் செய்திடுவேன்,...

இச்சூரியனைப் பார்
என்னை நகைக்கிறது...
அறியாத ஜடம்..
நான் இதை நிலவென்று
நினைத்துக்கொண்டேனாம்!
நினைவுகளினால் கொண்டது யாவும்
தோற்றப் பிழையா?

கடலினைப் பார்
எழுந்தாடுகிறது... எங்கே!?
விழுந்துவிட்ட இலைகளின் மத்தியில்
ஒருசேர கண்களில் தெரிகிறது
உனக்கு மட்டும் காட்சிப் பிழை..

என் நுனியில் சொக்கும்
பூ வழி சொல்கிறது உன்னை அடைய,
அதோ பார் வழி தெரிகிறது.
எங்கே?
கேட்காதே!
வழி அடைந்துதான் இருக்கிறது உனக்கு..
கண்களின் கோளாறுகள்.........
...

கொய்தது பிச்சி @ 5:15 AM, ,





கதிர் எழுப்பிய உன்னை
வரைந்துவிட்டேன் காதலோடு
உன் காதல் வெட்கி ஓடும் வண்ணம்.
நின் விழியிரண்டில் ஒன்று
என் விழியில் இருப்பது கண்டு
குதித்தாடுகிறதோ
திமிங்கிலம் வேதனையோடு?
அலைகளும் தூங்க
மறுக்கிறதோ நிந்தனையோடு!!???

உன் முகத்தில் தெரிவதெல்லாம்
கதிரவன் கீற்றுகளா?
கண்கள் காணாமல் போகிறதே!
அலைகளின் ஓதங்களா?
விழியுரண்டை அலைந்து திரிகிறதே!
உன்னோடு எழுந்தாடும் கதிரின்
இயக்கமும் என் தூரிகையின்
வர்ண கலப்பில் தூங்கிவிடும்
ஆதலால் மூடிய
இன்னொரு இமை
திறந்துப் பார் !
வெட்கித் தலை குனிந்து
ஓடும் உன் காதலியாகிய என்னை......


கொய்தது பிச்சி @ 6:10 AM, ,




டால்பினிடம் கற்கவேண்டிய கவிதை



நீராழம் சென்றதில்லை
பூமியில் பொய்கள்
புனைந்திடும் மீன்கள்...
நீ செல்வாய், நீரினில்
வாழ்ந்திடும் மனிதமே!

உறவுக்கு உறவில்லை
இங்கே
மண்ணிலே உறங்குகிறது
பாசத்தின் புன்னகை.
நீரிலே செய்திடுவாய் நீ
இவர்களின் சிரம் தாழ்ந்துபோகுமாறு!

தண்மை உண்டான தண்ணீரில்
தனியாய் ஆடுவாய்; பாடுவாய்;
உன் பிள்ளைகளாய் நீ நினைக்கும்
உன்னை வளர்ப்பவர்களோடு!!
தன்மை இல்லாமல் ஆடுவார்கள்
பாடுவார்கள் கூட்டம் கூட்டமாய்
பெற்றவனை சுட்டுத் தள்ளிய கையோடு!!

டால்பின்! உன்னிடம் நான் கற்க வேண்டிய
கவிதைகள் ஏராளம்...
நீ சுவர்க்கம். நான் இன்னும் இறங்கவில்லை
நீராடும் சுவர்க்கத்தில்...


கொய்தது பிச்சி @ 5:52 AM, ,




மொட்டு




நீர்க் குமிழ் நிலைபோல
நெஞ்சம் நிமிர்ந்து
கண்களை தூண்டுகிறது
முளைக்கப்படாத மொட்டு..

பருவ வயதுகளின்
இடைவெளியில்
நானும் ஓர் அழகியென்று
சூரியனைப் பார்த்து
சுட்டதுவே இந்த மொட்டு!

காலம் கடந்த பின்னும்
விரித்துக் காட்டி
வண்டுகளின் இமைகளை
ஈர்க்கச் செய்யுமே இந்த மொட்டு.

ஏதாவதொரு வண்டின் வாசனையில்
உலர உலர தேன் கொடுத்து
இன்னுமொரு மொட்டு
உருவாக்குமே இந்த மொட்டு..

இறுதிக் காலத்தில்
புயலாவது தென்றலாவது என்று
வண்டின் இறகுகளோடு
பயணம் புரிந்து
தரிசனம் கிடைக்காத
தூரத்திற்குச் சென்றுவிடுமே இந்த மொட்டு...




மொட்டு =  பெண்

கொய்தது பிச்சி @ 5:45 AM, ,




எத்தித் தெரிக்கும் நீர்!




எத்தித் தெரிக்கிறாய்
வாழைக்குருத்து போன்ற
உன் பருவக் கால்களால்
பளிங்கு போல தெரிக்கிறது
உன் மீது ஏக்கமாய்
இத்தனை நாள்
தவமிருந்த தண்ணீர்!

ஏன் என்று கேட்கிறது நீர்!
கொலுசுகளின் சப்தம் கேட்டாயா
என்று சொல்கிறாய்
அடிப் பாவாய்!
நீருக்கு கண்கள் உண்டு...
செவியிருக்குமா? உன் சொல் கேட்க...

அட!! பேசிவிட்டதே தண்ணீர்!
கொலுசோசைக்கு
நீரும் அடிமையோ?
கால்களின் வெட்கம்
தெரித்த நீராய் தெரிகிறது..
நில்
ஓடாதே!
சலசலத்துப் போயிருக்கும்
நீருக்கு என்ன பதில் வைத்திருக்கிறாய்?


நீ அல்லது கால்கள் அல்லது கொலுசு யாவும் பெண்னைக் குறிக்கும்.... நீரானது ஆண்

கொய்தது பிச்சி @ 5:38 AM, ,




அன்னையெனும் தியாக சொரூபி




என் கருவிழியின்
நரம்புகளுக்குள்
திவலை கட்டிய நீரினைக்
கண்டு கண்டே
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

கண்களின் பாஷைகளை
கண்சிமிட்டியே
கற்றுக் கொடுத்து
நிலவோடும் மலரோடும்
இணைய வைத்த
திருப்புதல்வி நீ!

என் அறை முழுவதும்
சப்தமின்றி பரவிக் கிடக்கும்
இறைவனோடு கலந்த
ஒளிச் சிதறல் நீ!

மேகக் கூடலில்
வண்ணமில்லா, வன்மையில்லா
தூய்மையான மழைத்துளியின்
ஓர் துளி அணு நீ!

தன்மையும், மென்மையும்,
பெண்மையும், உண்மையும்
கலந்த இக் காலத்ததின்
பொருத்தமான காவியம் நீ!

ஆயிரம் கவிதைகள்
உள்ளடங்கிய
ஆற்றல் வைரத்தினைவிட
ஒப்பில்லா
திருக்குறள் நீ!

நிறமும், சுவையும்,
உயிரும், விலையும்,
இல்லா ஜடப் பொருள்களுக்கு
கண்ணசைவில் உயிர்கொடுக்கும்
பார்வதியும் நீ!

இந்த யுகங்களின்
தூய்மையான ராகமாகிய
தாலாட்டின் தாய்மை நீ!

மலர்ந்து, குலுங்கும்
பூக்களின் மகிழ்ச்சியில்
குதூகலிக்கும் புன்னகை நீ!

மேகக் கூட்டங்களில்
ஆழ்ந்துறங்கும்
வெண்மதியின் மடியமர்ந்து
என்னை உறங்கவைத்த
தியாக சொரூபி நீ!

பூ மொட்டுக்களை
பார்வைக் கணைகளால்
ஏற்றி, கனியாக்கம் செய்யும்
தென்றலின் தலைவி நீ!

எத்தனை தவமிருந்தும்
எத்தனை வரம் பெற்றும்
காணக் கிடைக்கா தெய்வமும்
கிடைக்கக் காணா வரமும் நீ!

(ஆயிரம் வருடங்கள்
தவம் செய்து, வரம் பெற்ற
ஞானியர் எவரும்
காணாத தெய்வம் நீ!)

ஒரு விழியில்
இரு விழியாக்கி
ஒரு உயிரினில்
இன்னுயிர் இட்டு
வலிபிடுங்க பிச்சியைப்
பெற்றெடுத்தவள் நீ!

ரம்மியமாக சப்தமிடும்
ரீங்கார வண்டுகளின்
சத்தத்தில்
பிச்சிப்பூ வரவேற்க
மெளனமே பாடலாய் பாடும்
இணையில்லா ராகத்தின்
முதல் வரி நீ!

பல வார்த்தைகள் அடங்கிய
ஈடில்லா கவிஞனின்
கவிதைக்குள்,
மறைமுகமாய்
மறைந்திருக்கும்
உட்கருத்து நீ!

சிறு சத்தத்தோடு ஒரு
முத்தம் நான் கொடுக்க,
உன் ரத்தத்தை பாலாக்கித்
தந்த ஸ்ரீதேவீ நீ!!

மல்லிகையும், ரோஜாவும்
இன்னும் உயிர் வாழ
கூந்தல் ஏற்றி சூட்டிக்கொள்ளும்
பூக்களின் கடவுள் நீ!!

தினமும் உன்னைத்
தொழவே எழுந்திடும்
சூரியனின்
தாயும் நீ!

ரதியென்ன, ரம்பையென்ன,
மூவுலகிலும் இணையில்லா
சொரூபவதியும் நீ!

கொத்தித் திரியும்
குயில்களின் விழிகள் ஒத்த
கண்களைக் கொண்ட
சீதையும் நீ!

விரிந்து ஆடும்
மயில்களின் தோகையும் விட
மென்மை கொண்ட
கரங்களை உடையவளும் நீ!


நீ யின்றி
இக்கவிதை இல்லை
நானில்லை
உலகில்லை,
மோட்சமில்லை,
ஆக, நீயின்றி கடவுளும் உளவோ?


கொய்தது பிச்சி @ 5:27 AM, ,




இயற்கை நட்பு




தீண்டும் தென்றலின்
இன்ப ராகங்கள்
அதைக் குடைந்து குடைந்தே
உருவாக்கிய கவிஞனின் சிற்பம்

ஆண்டவன் அதிமயங்கி
தென்னைக் கீற்றுச் சந்துகளில்
வந்திறங்கி சுவாசம் தேடும்
ஆரோக்கிய ஸ்பரிசம்

ஆர்ப்பாட்ட கடலடியில்
ஆழ்ந்துறங்கும்
தென்றலை
அடிமனதில் வைத்து
அழுத்தி
காலம் இசைக்கும்
சோகத் தாலாட்டு

கற்பாறை மனதுகளை
தூக்கி யெறிந்த
கட்டிலா அலைகளின்
முக்கிய தருணங்கள்.

இருட்டுகிற பொழுதுகளில்
இனிய ஓசை எழும்
இலை உதிர்வுகளைக்
கேட்டு கேட்டே
உதயமாகும்
இன்பச் சூரியன்.

நித்தமும் ஓலைக் கீற்றின்
உள்வழி ஒளியாக
பிம்பங்களின் ரூபம் மாற்றும்
நிழல்களின் சிரிப்பு.

அஃறிணை பொருள்களின்
சத்துழைக்காத அனுபவங்களை
ஒத்துழைக்கச் செய்யும்
சண்டமாருதம்.

வெப்பத்தின் சச்சரவுகளை
சொக்கியே பார்க்கும்
H2O உள்ளத்தின் தவனம்
நீரின்றி உலகேதென
நமட்டுச் சிரிப்புடன் வாழும்
ஆன்மீக நந்தவனம்

உயிர்க் காற்றின்
ஓர்பொழுதுகளில்
திசையறியா பயணமிக்கும்
பறவைகளின் சரணாலயம்.


கொய்தது பிச்சி @ 5:25 AM, ,