பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....சிரிக்கும் பேதை
உன் வீரிய கண்களில்
தெரிகிறது
வேதனையின் ரணங்கள்

துயர் தீரும் சிரிப்பில்
தெரிகிறது
இழந்து போன கேள்விகள்

உன் வதனமே
ஓர் வசந்தம்தான்
உன் நயன விழிகளே
ஓர் சொந்தம்தான்

வெந்துபோன இதயம்
கொண்ட பேரலைகளுக்கு
சொந்தமிருக்கா?
இருந்திருந்தால்
உன் சொந்தம் இருக்கும்.

நெற்றிக் குங்குமம் ஓர்
ஆன்மிகத் தாலாட்டு
பொட்டுச் சந்தன ஓர்
ஞானிச்சியின் அடையாளம்

அரித்துப் போன
கடல் வணங்கும் உன்னை
உன் புன்னகையினால்...
சிரி சிரி சிரி
சிரித்துக் கொண்டே இரு
உன் சிரிப்புச் சுனாமியில்
தன்னைத் தானே
அழித்துக் கொள்ளும்
ஆழ்கடல்..

ஆனால்
மன்னிப்பு மட்டும் கொடுக்காதே!


கொய்தது பிச்சி @ 8:30 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்