பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....



மரத்தில் அமரும் பறவை




புன்னை மரத்தின் ஒரு கிளை......
பனி ஒரு மன்மதன்.
அஃறிணை மனிதர்களுக்கும்
உயர்திணை மிருகங்களுக்கு..
நெடுமழை ஒரு அப்பாவி..
யாருக்குத் தருவது
யாருக்குத் தரக்கூடாது என
அறியாத சிறுபயல்..
இவர்களின் மோகத்தில்
ஒரு குடும்பமாய் புன்னை மரம்.
இங்கே செவியில்லை; விழியில்லை;
நுதல்வதற்கோ நாவில்லை
ஆக பயமில்லை....
தேகம் சிரிக்க, கரங்கள் குலுங்குகின்றன..
பிஞ்சு விரல்களில் முளைத்துவிட்ட
சின்னஞ்சிறு நுனிகளின்
தங்கிய நீரோ வருத்தமாய் பிரிகிறது..
நுனியும் நீரும் கொண்ட காதல்
எனக்குத் தெரியாதா?
மெல்ல மெல்ல கார்பன்-டை-ஆக்ஸைடு
தீண்டிப் பார்க்கிறது, அது
நோண்டிய சிலுசிலுப்பில்
சிலிர்த்துப் போய்
என்னை வரவேற்கிறது கரங்கள்.
இறகுகளின் படபடப்பில்
இவனுக்கும் ஓர் விசிறிதான்
முகத்தில் அறைந்த காற்றாய்,
காதலாய், இவன் தழும்புகள்
என் இறகின் மென்மையையும் விட
மேலும் மெருகாகும்..
என் அலகின் முத்தத்தில்
இவன் அழகு கூடும்
வந்தமர்கிறேன் இவன் மடியில்
நுனியிலே விரல் விட்ட காதலை
நான் தொடர்கிறேன்...

கொய்தது பிச்சி @ 11:07 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்