பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....



இயற்கை நட்பு




தீண்டும் தென்றலின்
இன்ப ராகங்கள்
அதைக் குடைந்து குடைந்தே
உருவாக்கிய கவிஞனின் சிற்பம்

ஆண்டவன் அதிமயங்கி
தென்னைக் கீற்றுச் சந்துகளில்
வந்திறங்கி சுவாசம் தேடும்
ஆரோக்கிய ஸ்பரிசம்

ஆர்ப்பாட்ட கடலடியில்
ஆழ்ந்துறங்கும்
தென்றலை
அடிமனதில் வைத்து
அழுத்தி
காலம் இசைக்கும்
சோகத் தாலாட்டு

கற்பாறை மனதுகளை
தூக்கி யெறிந்த
கட்டிலா அலைகளின்
முக்கிய தருணங்கள்.

இருட்டுகிற பொழுதுகளில்
இனிய ஓசை எழும்
இலை உதிர்வுகளைக்
கேட்டு கேட்டே
உதயமாகும்
இன்பச் சூரியன்.

நித்தமும் ஓலைக் கீற்றின்
உள்வழி ஒளியாக
பிம்பங்களின் ரூபம் மாற்றும்
நிழல்களின் சிரிப்பு.

அஃறிணை பொருள்களின்
சத்துழைக்காத அனுபவங்களை
ஒத்துழைக்கச் செய்யும்
சண்டமாருதம்.

வெப்பத்தின் சச்சரவுகளை
சொக்கியே பார்க்கும்
H2O உள்ளத்தின் தவனம்
நீரின்றி உலகேதென
நமட்டுச் சிரிப்புடன் வாழும்
ஆன்மீக நந்தவனம்

உயிர்க் காற்றின்
ஓர்பொழுதுகளில்
திசையறியா பயணமிக்கும்
பறவைகளின் சரணாலயம்.


கொய்தது பிச்சி @ 5:25 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்