பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....டால்பினிடம் கற்கவேண்டிய கவிதைநீராழம் சென்றதில்லை
பூமியில் பொய்கள்
புனைந்திடும் மீன்கள்...
நீ செல்வாய், நீரினில்
வாழ்ந்திடும் மனிதமே!

உறவுக்கு உறவில்லை
இங்கே
மண்ணிலே உறங்குகிறது
பாசத்தின் புன்னகை.
நீரிலே செய்திடுவாய் நீ
இவர்களின் சிரம் தாழ்ந்துபோகுமாறு!

தண்மை உண்டான தண்ணீரில்
தனியாய் ஆடுவாய்; பாடுவாய்;
உன் பிள்ளைகளாய் நீ நினைக்கும்
உன்னை வளர்ப்பவர்களோடு!!
தன்மை இல்லாமல் ஆடுவார்கள்
பாடுவார்கள் கூட்டம் கூட்டமாய்
பெற்றவனை சுட்டுத் தள்ளிய கையோடு!!

டால்பின்! உன்னிடம் நான் கற்க வேண்டிய
கவிதைகள் ஏராளம்...
நீ சுவர்க்கம். நான் இன்னும் இறங்கவில்லை
நீராடும் சுவர்க்கத்தில்...


கொய்தது பிச்சி @ 5:52 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்