பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....கண்களின் கோளாறுகள்............
கூத்தாடுகிறதே பார்
என் எண்ணத்தில் அடிப்பட்ட
மரத்து இலைகள்!
பறித்துவிட்டதாலோ என்னவோ
பூவுக்கும் என்மீது கோபம்தான்.
பூவின் சொந்தமே! கலங்காதிரு
சிந்தனைகளினால் உனக்கொரு
தோட்டம் செய்திடுவேன்,...

இச்சூரியனைப் பார்
என்னை நகைக்கிறது...
அறியாத ஜடம்..
நான் இதை நிலவென்று
நினைத்துக்கொண்டேனாம்!
நினைவுகளினால் கொண்டது யாவும்
தோற்றப் பிழையா?

கடலினைப் பார்
எழுந்தாடுகிறது... எங்கே!?
விழுந்துவிட்ட இலைகளின் மத்தியில்
ஒருசேர கண்களில் தெரிகிறது
உனக்கு மட்டும் காட்சிப் பிழை..

என் நுனியில் சொக்கும்
பூ வழி சொல்கிறது உன்னை அடைய,
அதோ பார் வழி தெரிகிறது.
எங்கே?
கேட்காதே!
வழி அடைந்துதான் இருக்கிறது உனக்கு..
கண்களின் கோளாறுகள்.........
...

கொய்தது பிச்சி @ 5:15 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்